தங்கச்சிலை திருட முயன்றவர் சிக்கினார்

Date:

புத்தளம் – கருவலகஸ்வெவ புளியங்குளம் வெஹெரகல ரஜமஹா விகாரையின் தங்கச் சிலையை திருடுவதற்காக வந்த இரண்டு கொள்ளையர்களை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (17) அதிகாலை வாகனம் ஒன்றில் குறித்த விகாரைக்கு வந்த கொள்ளையர்கள் சிலர், அங்கு பாதுகாப்புக்கு இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் துப்பாக்கிகளையும் பறித்தெடுத்து, அங்கிருந்த தங்கச் சிலையை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொள்ளையர்கள் தங்க சிலையை திருடுவதற்கு முற்பட்டபோது, அங்கிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சத்தமாக கூச்சலிட்டனர்.

அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு விகாரையில் தங்கியிருந்த தேரர்களும் ஏனையவர்களுடன் கிராம மக்களும் அங்கு வந்துள்ளனர்.

இவ்வாறு விகாரையில் மக்கள் ஒன்றுகூடுவதை அவதானித்த கொள்ளையர்கள், தாம் வந்த வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், அதில் மூவர் விகாரை வளவு வழியாக தப்பிச் செல்ல முயற்சி செய்தனர். அந்த மூவரில் ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விகாரை வளவு வழியாக தப்பிச் சென்ற ஏனைய இருவரும் பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்