சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் நீதிமன்ற தடை உத்தரவை மீறி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பிரதான கடற்கரையில் இருந்து இன்று (30) ஆரம்பமாகி நடைபவனியாக திருகோணமலை வெளிக்கடை தியாகங்கள் நினைவு மண்டபம் வரை வந்து மண்டபத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணம் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிகளை சர்வதேசத்திற்கு மீண்டும் வலியுறுத்தி அதன்மூலம் அதற்கான நீதியை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறு கோரி நீதிமன்ற தடை உத்தரவை பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் வாசித்துக் காண்பிக்கப்பட்டதுடன் தமது காணாமல் போன உறவுகளின் நீதி வேண்டி தொடர்ந்தும் போராட்டதை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டபோது பொலிஸ் பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டர் காரர்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இன்றைய சர்வதேச காணாமல் போன தினத்தை முன்னிட்டு இலங்கை நாட்டில் படையினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இதுவரை வீடு திரும்பாத தமது உறவினர்கள் என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் தமக்கு எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், குறித்த சம்பவத்திற்கு சர்வதேச ரீதியிலாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கோரிக்கையினை முன்வைக்க முற்பட்ட வேலை இலங்கை பொலிசார் அதனை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெண்களை தடுத்து நிறுத்துவதற்கு கட்டாயமாக பெண் பொலிசார் வரவழைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு பொலிசார் செய்யவில்லை எனவும் பொலிசார் மீது குற்றம் சுமத்தினர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யும் வரை தாம் குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேறப் போவதில்லை எனவும் பொலிசாரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர்.
அதன் பிற்பாடு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து திருகோணமலை மறை மாவட்ட ஆயர் அவர்களிடம் வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அதை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-ரவ்பீக் பாயிஸ்-