நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகான் ‘கட்டுப்பணம்’ இழந்தனர்: குஷ்பு, ஸ்ரீபிரியா மண்கவ்வினர்; சீமானுக்கு 3வது இடம்!

Date:

திரையில் பிரகாசித்த நட்சத்திரங்களான குஷ்பு, ஸ்ரீபிரியா ஆகியோர் தேர்தல் களத்தில் ஜொலிக்க முடியாமல் தோல்வியை தழுவினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு 3வது இடமே கிடைத்தது. நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகான் கட்டுப்பணத்தையும் இழந்தனர்.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான சீமான், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களம் இறங்கினார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சீமான், தோல்வி அடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்த தேர்தலில் முதல் முறையாக களமிறங்கிய திரையுலக பிரமுகர்களும் மண்ணை கவ்வினர்.

அந்தவகையில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளரான நடிகை குஷ்பு, மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான நடிகை ஸ்ரீபிரியா, விருகம்பாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான கவிஞர் சினேகன் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்தனர்.

‘கட்டுப்பணம்’ இழந்த நடிகர்கள்

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் சொற்ப வாக்குகள் மட்டும் பெற்று படுதோல்வி அடைந்ததோடு, ‘கட்டுப்பணத்தையும்‘ இழந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...

அமெரிக்காவில் வீடொன்றில் 8 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்