தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை சந்திப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சிக்கும் தரப்புக்கள் தீர்மானித்துள்ளன.
நேற்று இணையவழி கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
பொதுவேட்பாளரை நிறுத்த தீர்மானித்த 7 தமிழ் கட்சிகளும், 7 தனிநபர்களும் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நாளை 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு சந்திப்புக்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விடுத்துள்ளார்.
நேற்றைய சந்திப்பின் போது, எதிர்வரும் காலங்களில் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் நடக்கும் சந்திப்புக்களில், இந்த கட்டமைப்பில் உள்ள கட்சிகள் எவையும் தனியாக கலந்து கொள்ள முடியாது என்றும், கட்டமைப்பில் உள்ள 14 பேரும் ஒன்றாகவே செல்ல வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய சந்திப்பில் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், நாளை ஜனாதிபதியுடனான சந்திப்பில் சில தமிழ் கட்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளதாக தமிழ் பக்கம் அறிகிறது.
பொதுவேட்பாளரை நிறுத்திய தரப்பிலுள்ள குறைந்தது 3 அரசியல் கட்சிகளாவது நாளை ஜனாதிபதியை சந்திப்பார்கள் என அறிய முடிகிறது.