25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமான நல்லூர் கந்தன் வீதித்தடைகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவித்தல்!

நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரும், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஆணையாளர் சார்பில் அத்திணைக்களத்தின் விசாரணை அதிகாரியும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், இவ்விடயம் தொடர்பில் போலீஸ் தரப்பினரிடமும், நல்லூர் ஆலய நிர்வாகத்திடமும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் மற்றும் ஆபத்துகள் ஏற்படாத வகையில் வீதி தடைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரின் நடவடிக்கையினை அடுத்து தமத மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

Leave a Comment