துன்னாலை பகுதியில் வீட்டில் இரகசிய சுரங்கம் அமைத்து கசிப்பு பதுக்கி வைத்திருந்த கில்லாடி சிக்கியுள்ளார்.
நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இன்று துன்னாலை தெற்கிலுள்ள வீடொன்றை சோதனையிட்டனர்.
இதன்போது, வீட்டில் இரகசிய சுரங்க அறையொன்று அமைக்கப்பட்டு, கசிப்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சுரங்க அறையின் மேற்பகுதி கொங்கிரீட் இடப்பட்டிருந்தது.
அங்கிருந்து சுமார் 20 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது.
42 வயதான குடும்ப தலைவர் கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1