24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

கோட்டாவின் முரட்டு முடிவுக்கு மன்னிப்பு கோரிய அரசாங்கம்

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது உடல்களை தகனம் செய்ததன் ஊடாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மனக்குறைகளுக்காக மன்னிப்புக் கோரி அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயின் போது உடல்களை தகனம் செய்ததன் காரணமாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட மனக்குறைகளுக்காக மன்னிப்புக் கோரி அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பாக சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களில் குறிப்பிட்டவாறு, வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த ஆட்களின் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கான பொறிமுறையாக உடற்தகன முறை விதந்துரைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகிய 276 முஸ்லிம்களின் பூதவுடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் 2021 பெப்ரவரி மாதத்தில் அவ்வாறான நபர்களுக்கு மிகவும் மட்டுப்பாடுகளுடன் கூடிய நல்லடக்கத்திற்கான அனுமதி வழங்கப்பட்டது.

2021 யூலை மாதத்தில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் அப்போதிருந்த நீர் வழங்கல் அமைச்சால் ஆற்றுநீர், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்த நீர் உள்ளிட்ட கொழும்பு கண்டி நீரியல் பிரதேசங்களில் SARS –CoV-2 வைரசை அடையாளங் காண்பதற்கான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ஆய்வின் பிரகாரம் மேற்புற நீரில் எவ்வித வைரசும் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் நீர் தொழிநுட்பத்திற்கான சீனா – இலங்கை ஒருங்கிணைந்து ஆராய்ச்சி மற்றும் மாதிரி நிலையத்தின் மூலம் இரண்டாவது கற்கையும் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அதன்மூலம் SARS –CoV-2 வைரஸ் நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்மூலங்களுக்கு ஊடுகடத்தப்படும் அடிப்படை ஆற்றல்வளங்கல் மலம் மற்றும் சிறுநீர் மூலமாகவே மாத்திரமே பரவுவதுடன், பாதுகாப்பான நல்லடக்கத்தின் மூலம் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, கொவிட் – 19 தொற்றுநோய்க் காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாய உடற்தகனக் கொள்கையால் பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கோருவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

Leave a Comment