தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக மூன்று நாட்கள் தமது கடமைகளை நிறைவேற்றாமல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கிராம சேவகர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
நிர்வாக அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் விரைவாக முடிவுகளை எடுக்க வேண்டும் என கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
‘எங்கள் கூட்டணி பல ஆண்டுகளாக இந்த பிரச்சினைகளை விவாதித்து வருகிறதுஇ ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்ந்து தாமதமாகின்றனஇ’ என்று அவர்கள் கூறினர்.
இதன் காரணமாக நேற்று (26) முதல் மூன்று நாட்களுக்கு வேலைகளில் இருந்து விலகி இருக்க கூட்டணி தீர்மானித்துள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்வதில்லை என்றும் கூட்டணி முடிவு செய்துள்ளது.
எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் மாவட்ட அளவில் கூட்டணி போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.