ஒவ்வொரு வருடமும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகள் பற்றிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம்.
2024-ம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் தீபிகா படுகோன் முதலிடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அடுத்து கங்கனா ரனாவத் ரூ.15 கோடி முதல் ரூ.27 கோடி, பிரியங்கா சோப்ரா ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி கேத்ரினா கைஃப் ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை வாங்குவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வாங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1