24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

நெடுந்தீவில் இளைஞன் கொலை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டார்.

இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று இரவு மது போதையில் வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் குறித்த  கொலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் அடி அடிகாயங்களுடன் சடலமாக. இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு அதன் பின்னர் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரணைமடுச் சந்தியில் இளம் பெண் கடத்தல்

east tamil

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

Leave a Comment