ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
174, முஸ்லிம் மத்திய கல்லூரி வீதி, அக்கரைப்பற்று-6 இலக்கம் N 11278608 கடவுச்சீட்டை உடைய அல்-ஹாஜ் அத்தம் லெப்பை அப்துல் கஃபூர் புதன்கிழமை (19) காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
இறந்தவர் 68 வயதானவர் என்றும், அவரது உடல் புனித மக்காவின் சாரா சித்தீனில் உள்ள கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெட்டாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மர்ஹூம் அல்-ஹாஜ் அத்தம் லெப்பை அப்துல் கஃபூர், அஸ்மி ஹஜ் டிராவல்ஸ் & டூர்ஸ் உடன் இணைந்த ஹாதி ஹஜ் டிராவல்ஸ் உடன் ஹஜ் யாத்திரைக்காக மக்கா சென்றிருந்தார்.
ஹஜ் கமிட்டி, முஸ்லிம் சமய விவகார திணைக்களம், ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம், அஸ்மி ஹஜ் டிராவல்ஸ் மற்றும் ஹதீ ஹஜ் டிராவல்ஸ் ஆகியவை புதன்கிழமை (19) புனித மக்காவில் ஜனாஸாவை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
இந்த ஆண்டு, சுமார் 3,500 இலங்கையர்கள் ஹஜ் யாத்திரைக்கு சென்றுள்ளனர், இது குழுவிலிருந்து பதிவான முதல் மரணம் என்று இலங்கை ஹஜ் குழு தெரிவித்துள்ளது.