25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
கிழக்கு

கதிர்காமம் காட்டுப்பாதை 30ஆம் திகதி திறக்கப்படும்

கதிர்காமத்திற்கு காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்று (19) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2 ஆம் திகதி வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை திறப்பதற்கான தீர்மானத்தை அம்பாறை அரசாங்க அதிபர் எடுத்திருந்த நிலையில் பக்தர்கள் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக எதிர்வரும் 30 ஆம் திகதி காட்டு வழிப்பாதை திறக்கப்படும்.

யாத்திரிகர்கள் உகந்தை வழியாக முன்னெடுக்கப்படும் பாதையாத்திரைக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாணசபை முன்னெடுத்துள்ளதன் காரணமாக யாத்திரிகர்கள் எந்தவித இடர்பாடுகளுமின்றி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 06 ஆம் திகதி கதிர்காம ஆலய கொடியேற்றம் நடைபெறவுள்ளதனால் 2 ஆம் திகதி பாதை திறக்கப்படுவதனால் தாங்கள் செல்லமுடியாத நிலையேற்படும் என பக்தர்கள் தன்னிடம் தெரிவித்ததை தொடர்ந்து அம்பாறை மாவட்ட செயலாளருக்கு 30 ஆம் திகதி பாதை திறப்பதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெருகல் காணி பிரச்சினை தொடர்பில் உறுதியளித்துள்ள அருண் ஹேமச்சந்திரா

east tamil

கிழக்கில் வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை

east tamil

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

east tamil

மழையால் சேதமடைந்த வீதிகள்: அதிகாரியின் செயல்

east tamil

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் பொங்கல் விழா

east tamil

Leave a Comment