26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
கிழக்கு

கல்முனையில் இ.போ.ச- தனியார்துறையினர் மோதல்!

இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று(13) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கல்முனை சாலை ஊழியர்கள் கருத்து தெரிவிக்கையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் மேற்குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்ததாவது இ.போ.ச வின் தனித்துவத்தை சிதைக்காதே போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்த கவனயீர்ப்பு பணி பகீஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து.இதன்போது இரு தரப்பினர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இ.போ.சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர்.இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பேரூந்துகளும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்லி கோவில் ஆக்கிரமிப்பு – 2

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

சல்லி கோயில் ஆக்கிரமிப்பு

east tamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment