இந்தியாவிலிருந்து வந்தால் 5 ஆண்டு சிறைத்தண்டனை: அதகளம் பண்ணும் அவுஸ்திரேலியா!

Date:

இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியர்கள் சொந்த நாடு திரும்பினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக 3 இலட்சம் பேருக்கு ஏற்பட்டு வந்த பாதிப்பு புதிய உச்சமாக நேற்று காலை வெளியான தகவலில் 24 மணி நேரத்தில் 4 இலட்சத்து 1 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 91 இலட்சத்து 64 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்திற்கு தடை வித்தித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவுடனான அனைத்து வகை போக்குவரத்தையும் அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வசித்து வரும் அவுஸ்திரேலியர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை வித்துள்ளது. மேலும், அவ்வாறு தடையை மீறி இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய குடிமக்களுக்கும் இந்த விதிமுறை பொறுத்தும்.

மேலும், இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியர்கள் மற்றும் பிற நாட்டினர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது சிறை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹீர் ஹண்ட் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்