இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூர்யாவின் தாயார் பிரீதா ஜெயசூர்யா காலமானார்.
அவருக்குசு 80 வயது. மாத்தறை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சனத் ஜயசூர்யா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.
உடனடியாக அவர் இலங்கை திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மறைந்த பிரீதா ஜயசூரியவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1