27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

சம்பூர் சம்பவத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்டனம்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் சம்பூர் சம்பவத்திற்கு எதிரான கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

தற்போது தமிழ்மக்கள் முள்ளிவாய்க்கால் வாரத்தை கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கி, நினைவு கூருகிறார்கள்.

இது தமது இழந்த உறவுகளை நினைவு கூரும் செயல் மட்டுமல்ல, உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் கடந்து வந்த பேரவலத்தை. இவற்றின் மத்தியிலும் உயிர் பிழைத்த அதிசயத்தை மீட்டுப் பார்க்கும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர்- கமலேஸ்வரன் விஜிதா (40), செல்வவினோத்குமார் சுஜானி (40). நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (43) ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (22)) சிங்களப் பொலிசாரால் இரவு வீடு புகுந்து துன்புறுத்தி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

சிறிலங்கா பொலிசாரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேலும் இது தொடர்பில் பெண்கள் அமைப்புகள் தமது கண்டனத்தை தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.

மேலும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை சர்வதேச நாட்டுத் தூதுவர்கள் உணர்ந்து சிறிலங்காவிற்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

east tamil

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

Leave a Comment