இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார்.
“வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காகசிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களைக் கேட்பதற்காக இந்த வாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளேன்“ என அமெரிக்க தூதர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் விவசாய மாணவர்களுடன் மறுசுழற்சி மற்றும் பாதுகாப்பு மற்றும் மரங்களை நடுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது அமெரிக்க தூதர் ஜூலி சங் மற்றும் அமெரிக்கன் கோனர் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1