24.4 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய 4 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடித்து மூதூர் நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை நீதிபதி தஸ்னீம் பௌசான் வழங்கியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நான்கு பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40), பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது மாணவியின் தாயை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது மகளான தேமிலா தனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதாகவும் அதனை தடுக்க முயற்சித்த பெண் பொலிஸாருக்கு கத்தி காயம் ஏற்பட்டதால் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் பல்கலைக்கழக மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சம்பூர் பொலிஸார், நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கூறிய நிலையில் அதில் ஈடுபட்டிருந்தவர்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாது முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுத்ததாகவும், இந்நிலையிலேயே குறித்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் (13) திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

east tamil

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

Leave a Comment