ஹோமாகம நகரிலுள்ள தங்கநகை கடையொன்றுக்கு இன்று (10) பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் கைத்துப்பாக்கியுடன் வந்த இனந்தெரியாத நால்வர் கடையிலிருந்த 03 இலட்சம் ரூபா மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 மோதிரங்கள் மற்றும் 48 பதக்கங்களையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தியுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1