27 C
Jaffna
January 24, 2025
Pagetamil
மலையகம்

உருக்குலைந்த சடலம் மீட்பு!

அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று (06) பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொதுமக்கள் நேற்று (05) வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாதவாறு அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் உயிரிழந்த நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார் உயிரிழந்தவரை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நீதிவானின் களப் பரிசோதனையின் பின்னர் பார்வையிட்டு அவர் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. மேலும் நுவரெலியா தடயவியல் பொலிஸ் பிரிவு மற்றும் வைத்திய அறிக்கையின் உதவியுடன் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய அக்கரப்பத்தனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எல்ல ரயில் டிக்கெட் மாபியாவை சேர்ந்த ஒருவர் கைது!

Pagetamil

ஹட்டனில் கரப்பான்பூச்சி சோறு

Pagetamil

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

east tamil

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

east tamil

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

east tamil

Leave a Comment