யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் கிழக்கு, மணல் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் 3 பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
வீட்டின் முன்பகுதியில் போத்தல் விழுந்து சத்தம் கேட்ட குடும்பத்தினர், வெளியே வந்து பார்த்த போது பியர் போத்தலில் தயாரிக்கப்பட்ட பெற்றோல் குண்டுகள் விழுந்து எரிந்து கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
மோதல் சம்பவமொன்றில் எதிரொலியாக அல்லது காதல் விவகாரத்தினால் இந்த தாக்குதல் நடந்ததா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1