25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
உலகம்

இறுக்கமான ஆடை அணிந்த ரிக்ரொக் வீடியோ வெளியிட்டு பிரபலமான பெண் சுட்டுக்கொலை!

ஈராக்கிய சமூக ஊடகப் பிரபலமான ஓம் ஃபஹத், பாக்தாத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (26) இவ்வாறு அவர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில், ஓம் ஃபஹத்  பாக்தாத்தின் ஜயோனா சுற்றுப்புறத்தில் குஃப்ரான் சவாடியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார் என்று உறுதிப்படுத்தியது.

அவரது மரணம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈராக் பாதுகாப்பு வட்டாரம் கூறுகையில், தாக்குதல் நடத்திய நபர் உணவு விநியோகம் செய்யும் நபராக காட்டிக் கொண்டு, தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓம் ஃபஹத் இறுக்கமான ஆடைகளை அணிந்து பொப் இசைக்கு நடனமாடும் டிக்டொக் வீடியோக்களுக்காக பிரபலமானார்.

“கண்ணியம் மற்றும் பொது ஒழுக்கத்தை” குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வீடியோக்களை பகிர்ந்ததற்காக கடந்த ஆண்டுபெப்ரவரி மாதம் நீதிமன்றத்தால் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஈராக்கிய “ஒழுக்கங்கள் மற்றும் மரபுகளை” மீறுவதாகக் கூறிய சமூக ஊடக உள்ளடக்கத்தை சுத்தம் செய்ய அரசாங்கம் 2023 இல் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியது. டிக்டொக், யூடியூப் மற்றும் பிற தளங்களில் அது அவமானகரமானதாகக் கருதப்படும் கிளிப்களைத் தேடுவதற்கு உள்துறை அமைச்சகக் குழு நிறுவப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

சீனாவில் செயற்கை சூரியன் பரிசோதனை வெற்றி

east tamil

ரஷ்யாவில் மாபெரும் ட்ரோன் தாக்குதல்

east tamil

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

Leave a Comment