25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
சினிமா

‘கும்முனு இருந்ததால் பார்த்ததும் மூட் வந்து விட்டது’: பின்னால் வந்து பிடித்த இயக்குனர்: நடிகை அதிர்ச்சித் தகவல்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்றும் அதற்கு ஓகே சொன்னால் தான் பட வாய்ப்பே கொடுக்கின்றனர். இல்லையென்றால், அப்படியே ஒதுக்கித் தள்ளி விடுகின்றனர் என பல படங்களில் நடித்த நடிகை காயத்ரி ரேமா பகீர் கிளப்பி உள்ளார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரேமா. பின் அதே ஆண்டு இரிடியம் என்னும் படத்தில் ‘சிவரஞ்சனி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சினிமாவில் வெளிப்படையாக நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் பீரியட்ஸ் நேரங்களில் பாத்ரூம் கூட கிடைக்காமல் அவதி பட்டது குறித்தும் வெளிப்படையாக தனது புதிய பேட்டியில் பேசியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பெரிய அளவில் பிரபலமாகவில்லை. 2016 ஆம் ஆண்டு ஒருத்தல் என்னும் படத்தில் நடித்தார், காயத்திரி ரேமா. இவர் துணை கதாபாத்திரத்தில் நயன்தாராவின் டோரா, திரிஷாவின் மோகினி, ஹர ஹர மஹாதேவி, செம என தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல படங்களில் நடித்துள்ளார்.

ஓடிடி வெப்தொடர்களிலும் காயத்திரி ரேமா நடித்துள்ளார். 2018ம் ஆண்டு வெளியான ‘வெள்ள ராஜா’ வெப்சீரிஸில் நடித்துள்ளார், அமேசான் பிரைம் ஓடிடியில் அந்த வெப்சீரிஸ் வெளியானது. போலீஸ் டைரி 2.O, கண்ணாம்பூச்சி மற்றும் முகிலன் போன்ற ஜீ 5 இணையதள வெப் சீரிஸ்களில் இவர் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் இவருக்கு பெரியளவில் வாய்ப்புக் கிடைக்காமல் போக காரணமே அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயத்துக்கு நோ சொல்லி வருவது தான் காரணம் எனக் கூறுகிறார்.

பிந்து மாதவியை எல்லாம் வைத்து படம் இயக்கிய பிரபல இயக்குநர் அவரோட படத்தில் என்னை ஹீரோயினா போடுறேன்னு சொன்னார். அந்த மாதிரியான நெருக்கமான காட்சிகள் எல்லாம் இருக்கும் நடிக்க முடியுமா? என கேட்டதும் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டேன். அப்போ வெப்சீரிஸ்லலாம் க்ளோஸா நடிக்கிறீங்க எனக் கேட்டார். சினிமாவுல கொலை பண்றதுக்காக யாராவது ரியல் லைஃப்ல கொலை பண்ணுவாங்கலா என சொன்னதும், ஓ சூப்பர் இப்படி தான் போல்டா பேசணும் என சொல்லிவிட்டு ஓடி வந்து அப்படியே என்னோட பின் பகுதியை பிடித்து விட்டார்.

உடனடியாக கடுப்பாகிட்டேன். கையை எடுங்க, உங்க சூட்டிங் ஸ்பாட்ல ஓங்கி அறைஞ்சா உங்களுக்கு அசிங்கமாகிடும். எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு சொன்னேன். சாரிம்மா கும்முன்னு இருக்குற உன்னை பார்த்ததும் மூடாகி விட்டது என அப்படியே பச்சையாக பேசினார். அந்த இயக்குநரின் பேரை சொல்ல விரும்பவில்லை என காயத்ரி ரேமா பகீர் கிளப்பி உள்ளார்.

நாம ஒரு விஷயத்துக்கு நோ சொல்லிட்டா நம்மள அப்புறம் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க, ஓகே சொல்லி ஹீரோயினாக மாறுபவர்கள் சிலர் ரூமுக்கு செல்வதையும் பார்த்துருக்கேன். அது அவங்களோட இஷ்டம் அதை தப்பா பேசக் கூட எனக்கு தகுதியில்லை எனக் கூறியுள்ளார் காயத்ரி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment