Pagetamil
சினிமா

விஜய் குரலில் ‘தி கோட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வீடியோ

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் முதல் சிங்கிள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலை விஜய் பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவில், விஜய் குரலில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற வார்த்தை ஒலிக்க உற்சாகமான பின்னணி இசை தெறிக்க விடுகிறது. விஜய்யின் ‘இன்ட்ரோ’ பாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த வீடியோ பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment