25.5 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

சட்டநடவடிக்கையெடுக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்குவதற்கு இன்று (30) எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்ததோடு, அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார்.

மேலும், லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டனர்.

இதன்படி, கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து லசந்த அழகியவன்னவும், தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment