அதிக பக்தர்கள் கூடிய ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டது: பக்தர்களிற்கும் தனிமை!

Date:

அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டமையினால் யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் ஆலயமொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் ஆலய திருவிழா சில தினங்களின் முன்னர் நடைபெற்றது. இதில் சுகாதார விதிமுறைகளை மீறி நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே, வண்ணார்பண்ணை சிறி காமாட்சியம்பாள் ஆலயத்தில் ஏராளமாக பக்தர்கள் குவிந்து, ஆலய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலும், கோண்டாவிலில் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

இதையடுத்து, நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியினால் ஆலயம் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். பலர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(இணைக்கப்பட்டுள்ளது கோப்பு படம்)

spot_imgspot_img

More like this
Related

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...

தென்னக்கோன் உள்ளிட்ட 9 பொலிஸ்காரர்களிற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக,...

ஊரான் வீட்டு பணத்தில் ஸ்வீட் சாப்பிட்ட மஹிந்த குடும்பம்: நீதிமன்றத்தில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் மகளிர் பிரிவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்