மக்கள் போராட்ட இயக்கத்தால் இன்று (20) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது 33 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பிக்குகளும் மூன்று பெண்களும் அடங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் லஹிரு வீரசேகர மற்றும் துமிந்த நாகமுவவும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பொருட்களின் விலை உயர்வு, வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சில விடயங்களை முன்னிறுத்தி இந்த போராட்டம் புறக்கோட்டை ரயில் நிலையத்தின் அருகில் ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை நோக்கி செல்ல முற்பட்ட போது அதனை தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1