24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

75 காதல் ஜோடிகள் உல்லாசமாக இருந்த போது இரகசியமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டவர் கைது!

காலி தடல்ல கடற்கரையில் காதலர்களை படம்பிடித்து அவர்களின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்து விசாரணையில் தடல்ல கடற்கரைக்கு அண்மித்த புதர்களுக்கு அருகில் உல்லாசமாக இருக்கும் காதலர்களை அணுகும் சந்தேக நபர், அங்கு தங்க வேண்டாம், பொலிசார் வருவார்கள் என கூறி, அருகிலுள்ள பிறிதொரு புதர் மண்டிய இடத்துக்கு காதல் ஜோடிகளை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த பகுதி அதிக புதர் மண்டி, மறைவான இடங்களை கொண்டது. அங்கு காதலர்கள் விரும்பியதை போல நடந்து கொள்ள வாய்ப்புள்ளது. அந்த பகுதிக்கு சென்ற காதலர்கள் அச்சமின்றி உல்லாசமாக இருக்கும் போது, புதர்களுக்குள் மறைந்திருந்த சந்தேகநபர் அவற்றை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அந்த வீடியோக்களை பணத்துக்காக இணையங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

சந்தேக நபரால் இதுவரை எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை மாணவர்களுடையவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நேற்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரவு இசை நிகழ்ச்சிகளின் கட்டுப்பாடுகள் மீதான ஆய்வு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

Pagetamil

மதுபோதையில் வந்த பொலிசார் பாதசாரி கடவையில் மூதாட்டியை மோதித்தள்ளினர்!

Pagetamil

புதையல் தோண்ட முயன்ற 10 சந்தேக நபர்கள் கைது

east tamil

2வது நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

Pagetamil

Leave a Comment