26.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

யாழில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளித்த ஒரேயொரு வைத்தியர் மிரட்டப்பட்டாரா?… பூட்டப்பட்டது வைத்தியசாலை: ஹொட்டல் உரிமையாளர் செல்வாக்கு செலுத்தினாரா?

அச்சுவேலி ஆரம்ப சுகாதார மையத்தில் கடமையாற்றும் வைத்தியர், பிரதேசத்தில் ஏற்பட்ட அச்சறுத்தல் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள உயரதிகாரியொருவரின் மிரட்டல் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அங்கு தொடர்ந்து கடமைபுரிய முடியாத நிலையில், அவர் யாழ் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனைக்கு இணைக்கப்பட்டுள்ளார்.

இதனால் அச்சுவேலி ஆரம்ப சுகாதார மையம் இன்று (19) பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

ஆரம்ப சுகாதார மையத்துக்கு அருகிலுள்ள கோயிலில் அதிக சத்தமாக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தியதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, சுகாதாரதுறை மற்றும் வெளித்தரப்புக்களின் அழுத்தம், மிரட்டல்களை தொடர்ந்து வைத்தியர் அங்கிருந்து அழைக்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி ஆரம்ப சுகாதார மையத்துக்கு அண்மையிலுள்ள சிறி ஆதிகுருநாதர் கோயிலில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்திய விவகாரம் கடந்த வருடமும் எழுந்தது. அப்பொழுது வைத்தியர் மிரட்டப்பட்டிருந்தார். இதையடுத்து, கோயில் தரப்பிலிருந்த சிலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த வருடமும், இதே சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த வருடம் சர்ச்சையெழுந்ததையடுத்து, இந்த வருடம் கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி பயன்படுத்த கிராம சேவகர் அனுமதியளிக்கவில்லை. இது தொடர்பில் சுகாதாரத்துறையுடன் பேச்சு நடத்திய பின்னர், காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஒலிபெருக்கி பயன்படுத்தாமல், Box இல் குறைந்த சத்தத்தில் ஒலிக்க விடுவதில் ஆட்சேபணையில்லையென சுகாதரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 19ஆம் திகதி Box இல் அதிக சத்தத்தில் ஒலிக்கவிடப்பட்டதாக ஆரம்ப சுகாதார வைத்திய நிலைய வைத்தியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம சேவகரின் கவனத்துக்கு வைத்தியர் கொண்டு வந்ததை தொடர்ந்து, கிராம சேவகர் சம்பவ இடத்துக்கு சென்றிருந்தார்.

இது தொடர்பாக வைத்தியசாலை வைத்திய அதிகாரியினால் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டது. அவர். சம்பந்தப்பட்ட நிர்வாக தரப்பினரை தொடர்பு கொண்டு தனது அதிர்த்தியை வெளியிட்டார்.

இந்த சூழலில், பிரதேசவாசிகள தரப்பிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஹொட்டல் உரிமையாளரிடம் இது தொடர்பில் தலையிடுமாறு கேட்கப்பட்டதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், வடமாகாண சுகாதாரசேவைகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர், வைத்தியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வைத்தியருக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பேசியதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி இரண்டு சம்பவங்களுக்குமிடையில் தொடர்புள்ளதா என்பது பற்றிய சுயாதீன தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கடிதமொன்றில், “வைத்தியர் ஷோபிகா, மேற்குறிப்பிட்ட பிரச்சினையை எழுப்பியதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக நாங்கள் கருதும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் (PDHS) அவரது தொழில்சார் கடமைகள் மீது தேவையற்ற துன்புறுத்தல் மற்றும் மறைமுகத் தாக்குதல்களை எதிர்கொள்வது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திலுள்ள மிக ஆபத்தான புற்றுநோயாளிகளின் வீடுகளிற்கே சென்று சிகிச்சையளிக்கும் திட்டம் முன்னைய ஆளுனர் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தன்னார்வலராக இணைந்து, இன்று வரை சேவை அடிப்படையில் செயற்படும் ஒரேயொரு வைத்தியர் அச்சுவேலி ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அவர் தன்னார்வலராக அந்த பணியை செய்து வருகிறார். யாழ் மாவட்டத்தில் இந்த பணியில் ஈடுபடும் ஒரேயொரு வைத்தியர் இவரே.

வைத்தியர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், வைத்தியர் அச்சுறுத்தல் இல்லாத சூழலில் குறிப்பிட்ட வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

மஹிந்தவுக்கும் வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்படலாம்!

Pagetamil

Leave a Comment