25.4 C
Jaffna
January 12, 2025
Pagetamil
கிழக்கு

மனநலம் பாதிக்கப்பட்ட 2 பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினமான இன்று (14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தற்கொலையில் ஈடுபட்ட தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.குறித்த மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நற்பணியில் திருகோணமலை இளைஞர்கள்

east tamil

மட்டக்களப்பு கிரான்குளத்தில் இலவச இருதய மாற்று சிகிச்சைக் கூடம் திறப்பு

east tamil

ஆரையம்பதியில் கொடூர விபத்து: முச்சக்கர வண்டி-மோட்டர்சைக்கிள் மோதியல் இருவர் படுகாயம்

east tamil

பெண்மீது சினிமா பாணி தாக்குதல்: கோடீஸ்வரன் எம்.பி கொந்தளிப்பு

east tamil

கோட்டைக்கல்லாற்றில் அரிய மீன்பிடிப் பூனை இறந்த நிலையில் மீட்பு

east tamil

Leave a Comment