வாழைச்சேனை பொலிஸ் பிரதேசத்தின் சூடு பத்தினசேனை காட்டுப் பகுதியில் வேட்டைக்கு சென்ற இருவரில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ரகுமத் நகர் நாவலடியைச் சேர்ந்த அப்துல் காதர் முகமட் இம்தியாஸ் (31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
உயிரிழந்தவரும் அவரது நண்பரும் சொட்கன் ரக துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமையன்று (12) மாலை வேட்டையாடுவதற்கு சென்ற வேளை, தவறுதலான துப்பாக்கிச்சூட்டில் மற்றையவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து அவரது நண்பர் துப்பாக்கியுடன் சென்று நடந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த துப்பாக்கியானது அனுமதி பெற்ற துப்பாக்கி என்று தெரியவந்துள்ளது.
நண்பர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-ருத்திரன்-