நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்யப்போகும் மாப்பிளைக்கு ஏற்கனவே திருமணமாகி மகள் இருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்யப்போவதாக நிச்சயதார்த்த புகைப்படங்களைபகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி மகள் உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். வாரிசு நடிகையான வரலட்சுமி தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை அமைத்துக்கொண்டார். ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த வரலட்சுமிக்கு ஒருகட்டத்தில் வில்லி கதாபாத்திரம் நன்றாக பொருந்தியது.
குறிப்பாக விஜய்யின் சர்க்கார், விஷாலின் சண்டக்கோழி 2, தனுஷின் மாரி 2 ஆகிய படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோ கதாபாத்திரத்துக்கே டஃப் கொடுத்திருப்பார். தமிழில் கலக்கிய வரலட்சுமி பிற மொழி படங்களிலும் என்ட்ரி கொடுத்தார்.
தமிழில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கியது போலவே பிற மொழி படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும், ஹீரோயின் கதாபாத்திரத்திலும் நடித்து தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், தனது திருமண தகவலை சில நாட்களின் முன் வரலட்சுமி பகிர்ந்திருந்தார்.
ஆனால் மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கு இரண்டாவது மனைவியாக போகிறாராம் என்பதுதான் ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.
நிக்கோலாய் ஏற்கனவே திருமணமானவர். கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் பாடி பில்டிங்கில் பல விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர்களுக்கு 15 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவிதாவுக்கும் நிக்கோலாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். முதல் மனைவியின் பிரிவை தொடர்ந்து வரலட்சுமிக்கும் நிக்கோலாய்க்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் 3 வருடங்களாக டேட்டிங் செய்து வந்துள்ளனர்.
இவர்களின் டேட்டிங் உறவு திருமண உறவுக்கு அப்டேட் ஆனது. அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 1ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். இந்த நிலையில் நிக்கோலாய் ஏற்கனவே திருமணமானவர் என்றும் இவரின் முதல் மனைவி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.