மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் 1200 சட்டவிரோத போதைப் பொருட்களை விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.
அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பெண்ணை தேடியபோது, அந்த பெண் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி குறித்த பெண்ணுக்கு போதைப்பொருள் விநியோகித்த மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான போதைப்பொருட்களை இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வந்து காட்டுக்குள் மறைத்து வைத்து, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்க திட்டமிடப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 48 வயதுடைய நானாட்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள்.