27.1 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

கொக்குவிலில் டெங்கு பரவும் சூழல்: 7 பேருக்கு நீதிமன்றம் தண்டம்!

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் அண்மைக்காலமாக அதிகளவில்  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சுற்றாடலை நுளம்பு பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆயினும் குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாது தொடர்ச்சியாக நுளம்பு பெருகும் சூழலுடன் சுற்றாடலை வைத்திருந்த உரிமையாளர்கள் 07 பேர், கொக்குவில் பொது சுகாதார பரசோதகரின் பரிசோதனையில் சிக்கி கொண்டனர்.

இவர்களுக்குகெதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியே வழக்குகள் கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரால் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகள் இன்றைய தினம் 07 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. எதிராளிகள் அனைவரும் குற்றச்சாட்டுகளை ஏற்று கொண்டதையடுத்து 07 பேரிற்கும் 20,000/= தண்டம் விதிக்கப்பட்டதுடன் கடுமையான எச்சரிக்கையும் நீதிமன்றால் வழங்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியின் காதை வெட்டிய கணவனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

east tamil

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

east tamil

ஊடக சுதந்திரத்திற்கான புதிய தருணம்: பழிவாங்கலுக்கு இடமளிக்க முடியாது – நலிந்த ஜயதிஸ்ஸ

east tamil

ஆரோக்கியமும் அறிவுத்திறனும் இணையும் கிளீன் ஸ்ரீலங்கா உத்தி – இரவீ ஆனந்தராஜா

east tamil

அரிசி சந்தை விலையை தீர்மானிக்க கூட்டுறவின் பங்கு முக்கியம் – அகிலன் கதிர்காமர்

east tamil

Leave a Comment