எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் நேற்று (5) அதிகாலை லொறியொன்று பயணித்தபோது இடிந்து வீழ்ந்துள்ளது.
பாலம் இடிந்து விழும் நேரத்தில் அதில் பயணித்த மரக்குற்றிகளை ஏற்றிய லொறி ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளான போதும், லொறியில் பயணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
தற்போது தொரகொலய மித்தெனிய வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால், அதற்கான மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1