ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ ஆலோசணைக்கு அமைவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் தலைமையில் அமைய பசறை பகுதிகளில் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகள் கொரியன் மொழி பயிலுவதற்கான இலவச வவுச்சர் வழங்கி வைக்கும் நிகழ்வு பசறை பெல்கத்தென்ன பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது கொரியன் மொழி பற்றிய பற்றிய தெளிவூட்டலும் கொரியன் மொழி பயில்வதற்கான முக்கியத்துவம் பற்றியும் கொரிய நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பு தொடர்பாகவும் இளைஞர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.இதன்போது முன்னாள் பசறை நகரசபை தலைவர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,பசறை,பதுளை பகுதியை சேர்ந்த இளைஞர் யுவதிகள் பலர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.