விமான சேவை பணியாளரை கொன்ற சந்தேக நபர் வெளிநாடு செல்ல முற்பட்ட போது விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் பணிபுரியும் 42 வயதான துலங்கலி அனுருத்திகா என்பவரை கொலை செய்த இந்த நபர், மலேசியாவிற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான இந்த நபர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்.
நேற்றிரவு 10.35 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்லும் விமானத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட துலங்கலி அனுருத்திகா, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் நிதிப் பிரிவில் பணியாற்றியவர்.
வைத்தியர் ஒருவரை திருமணத் செய்து, ஒரு பிள்ளையின் தாயான இவர், பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கஹதுடுவ அதிவேக வீதிக்கு வந்து கொண்டிருந்த போதே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மடபட பகுதியில் வசிப்பவர். திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர் பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.