டிக்கோயா- படல்கல தோட்டத்தில் கடந்த 4ஆம் திகதி குளவி கொட்டுக்கு இலக்காகி கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் வௌ்ளிக்கிழமை (05) உயிரிழந்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உட்பட 06 ஆண்களும் பெண்ணொருவரும் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயதான சதாசிவம் சிந்தை என்ற பெண், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வௌ்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
குளவி கொட்டுக்கு உள்ளான ஏனைய 06 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1