25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
சினிமா

கூட்ட நெரிசலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை பிடித்து அடித்த தனுஷ் பட நடிகை!

கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கூட்ட நெரிசலில் நடிகை ஐஸ்வர்யா ரகுபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990 களில் நடப்பது போன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்றும் வெளியாக இருக்கிறது. இந்த படம் தனுஷின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது. அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் எகிறிக்கொண்டே போகிறது. அந்த வகையில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ரகுபதியும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முன் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் தனுஷை பார்க்க ரசிகர்கள் கும்பலாக சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் அங்கு அமர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடுப்பான அவர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து காலில் விழ சொல்லி தர்மஅடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ‘சரக்கு’ பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ் ஐஸ்வர்யா ரகுபதிக்கு காட்டாயப்படுத்தி மாலை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment