“எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரே மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும்” என விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை ஒரே மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும். அது விஜயகாந்த்தான். நட்சத்திர அந்தஸ்து வருவதுக்கு முன்னர் என்னிடம் எப்படி பழகினாரோ, அப்படி தான் இவ்வளவு உயரம் வந்த பிறகும் பழகினார்.
விஜயகாந்த்திடம் எந்த அளவுக்கு பணிவு உள்ளதோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் வரும். அதுவே அவரிடம் எனக்குப் பிடித்தது. அவரின் கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கு வந்தார் என்றே நான் நினைக்கிறேன். இப்பபடிப்பட்ட நேர்மையாளரை இழந்திருப்பது ஒருவகை தனிமை தான். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு செல்கிறேன்” என்று உருக்கமாகப் பேசினார்.