“ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன்” என மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்துக்கு நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை. யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து உயர்ந்த அண்ணன் விஜயகாந்தின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பதிவில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், “விஜயகாந்த் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு மனதுக்கு வருத்தமாக உள்ளது. ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன் அவர்.
கடைக்கோடி மக்கள் வரை, அனைவருக்கும் உதவி செய்து, கேப்டனாக நம் அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர். விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். குடும்பத்தினருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.
அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை…
யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..
கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! pic.twitter.com/PHeqHNG3uk
— Suriya Sivakumar (@Suriya_offl) December 28, 2023