யாழ்ப்பாண மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன். சி.சிறிதரன். செ.கஜேந்திரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் என பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1