24.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இந்தியா

விருந்து பட்டியலில் நல்லி எலும்பு இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்

நிச்சயதார்த்த விருந்தில், ஆட்டு நல்லி எலும்பு இல்லாத காரணத்தினால் தெலங்கானாவில் ஒரு திருமணமே நின்று போனது.

தெலங்கானா மாநிலத்தில் பரவலாக இந்து திருமணங்களிலும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. இதனை ஒரு அந்தஸ்தாக கருதுகின்றனர். ஆதலால், திருமணம் முடிந்ததும், தடபுடலாக பல வகை அசைவ உணவுகள் பரிமாறப்படுகின்றன.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்த்த பெண்ணுக்கும், ஜகத்தியாலா பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த நவம்பர் மாதம் பெண் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது, பெண் வீட்டார் நிச்சயதார்த்த விழாவிற்கே தடபுடலாக அசைவ உணவு வகைகளை பரிமாறியுள்ளனர்.

ஆனால், இந்த கறி விருந்தில், நல்லி எலும்பு பரிமாறப்பட வில்லை எனும் வாதம் மாப்பிள்ளை வீட்டார் பக்கத்தில் எழுந்தது. இது மெல்ல பரவி, பெண் வீட்டாரின் காதுகளுக்கு எட்டியது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவி, இறுதியில் அது கை கலப்பில் கொண்டு போய் விட்டு விட்டது.

இது குறித்து சிலர் போலீஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததால், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இரு வீட்டாரையும் அழைத்து பேசி அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த சம்பவத்தால், மனம் உடைந்ததாகவும், அவமானம் ஏற்பட்டதாகும் கூறி, மாப்பிள்ளை விட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விடுவதாக அறிவித்துள்ளனர்.

பெண் வீட்டாரும், இந்த திருமணத்திற்கு நாங்களும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளனர். நல்லி எலும்பால் ஒரு திருமணமே நின்று போகும் காட்சிகள், சமீபத்தில் வெளியான ‘பலகம்’ எனும் தெலுங்கு சினிமாவில் இருந்தது. அது இந்த சம்பவத்தால் உண்மையாகி விட்டது என பலர் கருத்து கூறி வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

வேங்கைவயல் சம்பவம் தனிப்பட்ட விரோதம்: தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் – தமிழக அரசு வேண்டுகோள்

Pagetamil

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

Leave a Comment