பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பீரியட் படமான இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்தப் படம் ஜனவரி 26ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் மார்ச் 29ஆம் திகதிக்கு இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1