சஜித் அணியில் இணையும் 4 எம்.பிக்கள்!

Date:

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் இணையவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவ, பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகிய நால்வரும் விரைவில் சஜித் பிரேமதாச அணியில் இணையவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் இரு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும உட்பட பலர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தால், தொடர் நிபந்தனைகளுடனும் வேலைத்திட்டத்துடனும் கூட்டணிக்குள் பிரவேசிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதில் அர்த்தமில்லை என்று காட்டியுள்ளனர்.

சுதந்திர மக்கள் சபையின் எம்.பி.க்கள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை நாவலவில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, பேராசிரியர் சன்ன ஜயசுமன, கலாநிதி நாலக கொடஹேவ ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூடிய விரைவில் இணைந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதன்படி அந்த நான்கு எம்பிக்களும் விரைவில் சஜித் அணியில் இணைய உள்ளனர்.

சுதந்திர மக்கள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 எம்.பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்!

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில்...

தரமற்ற நிலக்கரி ஊழலை விசாரிக்க கோரி போராட்டம்

தரமற்ற நிலக்கரி ஊழல் குறித்த தணிக்கை அறிக்கை மீது உடனடி விசாரணை...

லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு: அடுத்த வாரம் அமெரிக்காவில் கூட்டம்!

ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குவதையும், "அமைதி உறவுகளை" ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு லெபனானுடன் நேரடிப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்