கல்முனையில் திடீர் பரிசோதனை!

Date:

நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் இன்று (27) மதியம் சுகாதார சுற்றிவளைப்பொன்று கல்முனை பஸாரில் நடைபெற்றது.

கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்முனை பொலிஸார், பாதுகாப்பு படை அதிகாரிகள், சுகாதார துறை ஊழியர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்த இந்த சுற்றிவளைப்பின் போது சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக்கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மேலும் மக்கள் நெரிசலாக கூடுவதை எவ்வாறு தவிர்க்கச் செய்வது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து இங்கு எடுத்துரைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

‘தேனிசை தென்றல்’ தேவா மிகவும் நல்லவர்! – தலைவர்கள் இரங்கல்

தேவாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர்...

‘தேனிசை தென்றல்’ தேவா உடலுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி

பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது...

அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யிடம் அழைப்பிதழ் வழங்கினார் கலாநிதி மாறன்

இசையமைப்​பாளர் அனிருத் ரவிச்​சந்​தர், தொழில​திபர் காவ்யா கலாநிதி மாறனின் திருமண வரவேற்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்