மல்லாவி நகரில் அமைந்துள்ள இரு பல்பொருள் அங்காடிகளிற்கு 55000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது
மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள மல்லாவி நகரில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகள் 07.11.2023 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது காலாவதி கடந்த உணவுப்பொருட்கள், மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள், மூல உற்பத்தி திகதி மற்றும் காலாவதி திகதி உட்பட சுட்டுத்துண்டிடல் இல்லாத உணவுப்பொருட்கள், களஞ்சிய அறையில் இலகுவான முறையில் தொற்று ஏற்படக்கூடிய நிலையில் வைத்திருந்த இரு பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கு எதிராக இன்று மல்லாவி பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் (15.11.2023) மாங்குளம் சுற்றுலா நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கு 32 000,23 000 வீதம் இரு கடைகளுக்கும் 55 000 தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.