குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
நாட்டிற்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Isolez Biotech நிறுவனத்தினால் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு, அதன் உரிமையாளர் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நவம்பர் 15 வரை காவலில் வைக்கப்பட்டார்.
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் விநியோகித்ததாக குறித்த நபர் கடுமையான குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
மேலும், தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1