Pagetamil
இலங்கை

கொழும்பில் பொலிசாரை குழப்பத்தில் ஆழ்த்திய சம்பவம்

அமெரிக்காவில் இருந்து கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு போலி முகவரியில் அனுப்பப்பட்ட ஐந்து கிலோகிராம் குஷ் போதைப்பொருள் அடங்கிய பார்சலை எடுக்க வந்த தொழிலதிபர் உள்ளிட்ட மூவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

தொழிலதிபர் நேற்று மதியம் தபால் ஊழியர் ஒருவருடன் பார்சலை எடுத்துச் செல்ல வந்தபோது, மத்திய தபால் நிலையத்திற்கு அருகே அவர்களை கைது செய்யும் முயற்சியில் இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த பார்சல் தொடர்பில் தகவல் கிடைத்ததும் மத்திய தபால் நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசைப்பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அந்த இடத்திற்கு காரில் வந்த இரு சந்தேக நபர்களை கைது செய்யச் சென்ற போது இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

இருவரும் கைது செய்யப்படுவதை எதிர்த்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவை தரையை தாக்கின. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற பொலிஸார் காரை விட்டுச் சென்றுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் காரின் சாவியை பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாகவும், கார் வழக்குடன் தொடர்பு இல்லாததால், பின்னர் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த இடத்தில் விடப்பட்டதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட வர்த்தகர் நுகேகொடை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்று காரை நிறுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், இருவரையும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகவும், இது திட்டமிட்ட குற்றக் கும்பலின் செயலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை பொலிசார், பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் கடந்தும் இந்த சம்பவம் குறித்து தெரியவில்லை.

எனவே, கார் கைவிடப்பட்ட இடத்திற்குச் சென்ற விசேட பொலிஸ் குழுக்கள், காரில் கடத்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அந்த பகுதி பொலிசாருக்கு தகவல் கொடுத்த பின்னரே, இந்த சம்பவம் ஒரு கிரிமினல் கும்பலின் செயல் அல்ல என்பது உறுதிசெய்யப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து வந்த குஷ் போதைப்பொருள் பார்சல் கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் இருந்து சனிக்கிழமை 21ஆம் திகதி வெளியிடப்பட்டதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு பார்சலை அனுப்பியவரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி எனக்கூறி அங்கீகரிக்கப்பட்ட கடிதம் ஒன்றை கொண்டு வந்த தபால் ஊழியர் ஒருவரால் வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சுங்க இலாகா சோதனைக்கு பின் அந்த பார்சலை வெளியே எடுக்க முற்பட்ட போது அதில் குஷ் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்ததாகவும், பார்சலை வைத்து விட்டு தபால் ஊழியர் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் தபால் திணைக்கள ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் கைது செய்யப்பட்ட தபால் ஊழியரை பயன்படுத்தி அந்த தொழிலதிபரை கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனைக்கு இழுத்து அங்கு அவரை கைது செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடையாள அட்டையின்றி பக்கத்து கடைக்கு சென்றவரை கைது செய்த பொலிசார் இடமாற்றம்!

Pagetamil

தண்டவாளத்தில் செல்பி எடுத்த தாயும், மகளும் ரயில் மோதி பலி

Pagetamil

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை

Pagetamil

பிரித்தானியர் ஒருவரால் வந்த வினை: இலங்கையில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஆபிரிக்க நத்தைகள்!

Pagetamil

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

Leave a Comment