தமிழகத்தின், மண்டபம் அகதி முகாமில் வசித்து வந்த 3 பேரை கொண்ட இலங்கைக்குடும்பம் அங்கு வாழ முடியாமல் இலங்கைக்கே திரும்பியுள்ளது.
எனினும், அவர்கள் படகு வழியாக இரகசியமாக இலங்கைக்குள் நுழைந்து வசித்து வந்த நிலையில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் புகுந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குத்தனை வடக்கில் உள்ள வீடொன்றில், இந்தியாவிலிருந்து வந்தவர்கள் குடியிருப்பதாக இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பருத்தத்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று பருத்தித்துறை பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 58, 42, 39 வயதான உடன்பிறப்புக்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த செப்ரெம்பர் 22ஆம் திகதி இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1